திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:09 IST)

பிரதமரை வரவேற்க சென்னை விமான நிலையம் வந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
 
சென்னை வரும் பிரதமரை வரவேற்க சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
 
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து, தமிழக கோரிக்கைள் குறித்து வலியுறுத்த உள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இன்று மாலை சென்னையில் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.