ஆளுனருடன் முதல்வர், துணை முதல்வர் திடீர் சந்திப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துகுடியில் உள்ள பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்றும் இன்றும் வெடித்த கலவரம் காரணமாக காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்,
இந்த நிலையில் இந்த பகுதியில் இன்னும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இயல்பு நிலை திரும்பாமல் பதட்டமாக உள்ளது. காவல்துறையினர் இந்த பகுதியில் அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சற்றுமுன்னர் திடீரென சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் ஜெ.அன்பழகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்காகவே உதகையில் கலாசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது