ஜெயலலிதாவையே சமாளித்தோம், அழகிரி அச்சுறுத்தல் சாதாரணம்: திமுக

Last Modified புதன், 29 ஆகஸ்ட் 2018 (21:10 IST)
திமுகவுக்கு ஜெயலலிதா கொடுத்த அச்சுறுத்தல்களையே நாங்கள் சமாளித்தோம். அப்படிப்பட்ட எங்களுக்கு அழகிரியின் அச்சுறுத்தல் எல்லாம் வெகு சாதாரணம் என்று திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரி திமுகவில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், திமுகவை அழகிரி உடைப்பார் என்றும் இரண்டுவித கருத்துக்கள் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை அழகிரியால் திமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை.


இந்த நிலையில் என்னை திமுகவில் சேர்த்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ். இளங்கோவன், 'ஜெயலலிதா பெரிய பெரிய அச்சுறுத்தல்களையெல்லாம் திமுகவுக்கு கொடுத்தார். அதையெல்லாம் சமாளித்து, எதிர்கொண்டு, போராடி நின்றது திமுக. ஜெயலலிதாவின் மிக மோசமான அச்சுறுத்தல்களையெல்லாம் பார்த்தால், அழகிரி சொல்லும் அச்சுறுத்தல்களெல்லாம் ரொம்ப சாதாரணம். இதையெல்லாம் கடந்துபோகிற சாதுர்யமும் துணிச்சலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு' என்று கூறியுள்ளார்..


இதில் மேலும் படிக்கவும் :