புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (16:05 IST)

இத வச்சு இட்லி கடை கூட போட முடியாதே! : வைரல் புகைப்படம்

அமைதிப்பேரணி குறித்து சொற்பமான ஆட்களுடன் அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.

 
திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொள்ளாததால் கடும் கோபத்தில் இருக்கும் அழகிரி, தனது பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் வருகிற செப்டம்பர் 5ம் தேதி அமைதிப்பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். சேப்பாக்கம் பகுதியிலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிவரை இந்த பேரணி செல்ல இருக்கிறது. இதில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தனது ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் கூறி வருகிறது.

 
இந்த பேரணி தொடர்பாக நேற்று அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தார். ஆனால், சொற்பமான எண்ணிக்கையிலான நபர்களுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  இந்த கூட்டத்தை வைத்து அவர் பேரணியை எப்படி நடத்தபோகிறார் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.