திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (22:21 IST)

திருவாரூர் தேர்தல்: திமுக நெருக்கடியா?

திமுகவுக்கு நெருக்கடி  தரவேண்டும் என்பதற்காகவே திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மீது தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் திமுக உள்ளது.

அதேபோல் திமுக தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைய வேண்டுமானால் திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.

ஆனால் அதிமுகவுக்கும், அமமுகவிற்கும் இந்த நெருக்கடி இல்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடிப்பது யார்? என்பதை நிரூபித்தால் போதுமானது. இந்த மூன்று கட்சிகளை தவிர வேறு கட்சிகள் திருவாரூர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது