திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (10:59 IST)

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; 2 நாளாக விடுமுறை! – திருவள்ளூரில் பரபரப்பு!

திருவள்ளூரில் தனியார் பள்ளி ஒன்றிற்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் போன் கால் வந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கு விரைந்த போலீஸார் மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்றும் அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போன் கால் வந்துள்ளது.


இதனால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. அதேசமயம் போன் கால் செய்தது யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.