வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:36 IST)

ரூ.10 ஆயிரம் சன்மானம்: திருவள்ளூர் காவல்துறை அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் ரூபாய் பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்கள் அதிகம் நடமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாவட்ட காவல்துறை போதைப் பொருளை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்பவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
மேலும் போதைப் பொருள் விநியோகம் குறித்த தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார்.