வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (16:22 IST)

மிக்ஜாம் புயல் எதிரொலி: தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு..!

மிக்ஜாம் புயல் காரணமாக புதுவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்திலும்  சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் டிசம்பர் 4ஆம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.  இருப்பினும் சென்னை உட்பட மற்ற மாவட்டங்களுக்கு இன்னும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran