திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (07:51 IST)

கர்ப்பமான பெண்ணின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை – உறவினர்கள் செய்த கொடூரம் !

வீட்டுக்கு வந்த உறவினர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவரைக் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சுட்டக்கொண்டா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மகேஸ்வரன் மற்றும் ரேவதி. ரேவதி, கர்ப்பமாக இருந்ததால் அவரைக் காண சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய இரு உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற ரேவதி அவர்களுக்கு கறி விருந்து வைத்துள்ளார்.

அப்போது ரேவதிக்கு செல்போனில் அழைப்பு ஒன்று சிக்னல் கிடைக்காததால் வெளியில் பேச சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ரேவதி திரும்ப வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது மலையடிவாரத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு நிலையில் சடலமாக ரேவதி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேவதியின் வீட்டுக்கு வந்த உறவினர்களான சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும்தான் நகைக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.