1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (17:11 IST)

போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவி தப்பமுயற்சித்த கைதி!

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மரியசிலுவை.  இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள் விசுவாசம் என்பவரை கூட்டு சேர்ந்து அடித்து கொலை செய்தார். 
 
இதையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட இவர் நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் அவருடன் இருந்த காவலர் மீது மிளகாய்ப்பொடி தூவிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இருந்தும் காவலர் அவரை மடக்கிப்பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இச்சம்பவம்குறித்து போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.