1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (10:48 IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா..! – தேரோட்டம் எப்போது?

Nellaiyapar Temple
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் இன்று விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித்திருவிழா மிகவும் பிரபலமானது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெற வில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று ஆனி 1ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றம் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் ஆனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

ஆனித்திருவிழா கொடியேற்றத்திற்கு பிறகு 10 நாட்கள் விமரிசையாக திருவிழா நடைபெறும். ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் ஓடும் திருவிழா ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. திரளான பக்தர்கள் திருவிழாவிற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.