ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மே 2024 (14:44 IST)

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா ஆதரவாளர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கூறிவரும் நிலையில் இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
ஜெயலலிதா அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் என்றும் அவர் ஒரு மதத்திற்கு மட்டும் ஆதரவாளர் அல்ல என்றும் அனைத்து மதங்களின் மீதும் அவர் அன்பு கொண்டிருந்தார் என்றும் சசிகலா மற்றும் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வந்தனர். 
 
இந்த நிலையில் இது குறித்து திருநாவுக்கரசர் கூறிய போது ’ஜெயலலிதா ஆன்மீகவாதி தான், அவர் சாமி கும்பிடுவார், ஆனால் அதே நேரத்தில் அவர் மதவெறி கொண்டவர் அல்ல’ என்று தெரிவித்தார். 
 
சாமி கும்பிட்டவர்கள் எல்லாமே மதவாதிகள் என்று குறிப்பிட முடியாது என்றும், அண்ணா கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியிருந்தார் என்றும், இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூட கடவுள் நம்பிக்கை உடையவர் தான் என்றும் அதற்காக அவர்கள் மதவெறி கொண்டவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆன்மிகம் வேறு, மதவெறி வேறு என்றும் ஜெயலலிதா ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டவர் ஆனால் மதவெறி கொண்டவர் அல்ல என்றும் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்தார். 
 
Edited by Siva