வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (16:17 IST)

கிணற்றில் தவறி விழுந்த புலி ...மக்கள் அதிர்ச்சி : மீட்புப் பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் உள்ள கட்னி நகரில் ஒரு புலி தவறி கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவிலங்கு அதிகாரிகள் புலியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வன விலங்கு அதிகாரி கூறியதாவாது : கட்னி நகரில் உள்ள கிணற்றில்  ஒரு புலி தவறி விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு நாங்கள் விரைந்து சென்றோம். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களும் மிகுந்த பதற்றத்துடன் உள்ளனர்.
 
அதனால் அப்பதற்றத்தைக் குறைக்க வேண்டி, அங்குள்ள மக்களை வேறு பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளோம். எனவே புலியை கிணற்றிலிருந்து மீட்ட பிறகுதான், அப்புலி எப்போது கிணற்றில் விழுந்தது என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்தார்.
 
மேலும் மனிதன் காட்டுப் பகுதிகளை அழித்து வீடுகளாக்கி விட்டதால், காடு வாழ் உயிரினங்கள் எல்லாம் மனிதன் வசிக்கும் இடத்திற்கு, தண்ணீர் தேடி வருவது அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.