1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:56 IST)

தமிழ் புலிகளுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டிய முதல்வர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கக்குட்டிகளுக்கும், புலிகுட்டிகளுக்கும் முதல்வர் பழனிசாமி சமஸ்கிரதத்தில் பெயர் சூட்டியதால் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்த மூன்று சிங்கக்குட்டிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதீப், தட்சணா, நிரஞ்சன் என பெயர் வைத்தார். அதே போல் 4 புலிகுட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் என பெயர் சூட்டினார்.

இதில் வெண்மதி என்ற பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரத பெயர்கள். இதனால் தமிழ்நாட்டில் பிறந்த புலிகளுக்கு தமிழில் பெயர் வைக்காமல் சமஸ்கிரதத்தில் பெயர் வைத்துள்ளார் என டிவிட்டரில் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.