புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (19:33 IST)

முதல்ல இதை கட்டுங்க பிறகு வீடு கட்டலாம்- புதுச்சேரி முதல்வரின் புதிய சட்டம்

அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சினையை போக்க என்ன செய்வதென்று தெரியாமல் பல நாடுகளும் குழம்பி நிற்கின்றன. பருவமழை பெய்யும் நாடுகள் மழைநீர் சேகரிப்பை அவசியமாக்க பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் புதிய திட்டம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

நிலவிவரும் தண்ணீர் பிரச்சினையை போக்கவும் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கவும் மழைநீரை சேகரிப்பதே இப்போதிருக்கும் ஒரே வழி. எனவே மழைநீர் சேகரிப்பை அதிகப்படுத்த வேண்டும் என உணர்ந்த முதல்வர் அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இனிமேல் வீடு கட்டும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பை உருவாக்கவேண்டு. மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாதவர்களுக்கு வீடுகட்ட அனுமது தர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வலிமையான சட்டங்கள் அமைத்தால்தான் மக்கள் அதற்கு கட்டுபட்டு சரியாக நடந்து கொள்வார்கள் என இந்த திட்டத்தை பலர் வரவேற்றுள்ளனர்.