1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:02 IST)

ஒரே நேரத்தில் காவல்துறைக்கு தேர்வான 3 சகோதரிகள்: குவியும் வாழ்த்துக்கள்!

police
ஒரே நேரத்தில் காவல்துறைக்கு தேர்வான 3 சகோதரிகள்: குவியும் வாழ்த்துக்கள்!
மூன்று சகோதரிகள் ஒரே நேரத்தில் காவல் துறையில் தேர்வாகியுள்ள நிலையில் அந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்கா தங்கைகள் மூன்று பேர் ஒரே நேரத்தில் காவல் துறை தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று காவலர் ஆகியுள்ளனர்
 
 ராணிப்பேட்டையில் உள்ள கீழ்வதம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷகிலா - வெங்கடேசன் தம்பதியரின் மூன்று மகள்களான வைஷ்ணவி, நிரஞ்சனி, ப்ரீத்தி ஆகியோர் ஒரே நேரத்தில் காவலர் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர் 
 
நேற்று அவர்கள் திருவள்ளூரில் காவலர் பயிற்சியைமுடிந்துள்ள நிலையில் விரைவில் அவர்கள் காவலர் பணியில் ஈடுபடவுள்ளனர் 
 
அக்கா தங்கைகள் மூவரும் ஒரே நேரத்தில் காவல் தமிழ்நாடு காவல் துறையில் சேர்ந்து உள்ளதை அடுத்து அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்து மூன்று சகோதரிகளுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran