செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (14:55 IST)

போலி பணம் மூலம் நகையை ’லபக் ’செய்த காதல் ஜோடி...

வட மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில்  உள்ள லூதியானாவில் ஜோதான் நகரில் உள்ள ஒரு நகைக்கு வந்த இளம் காதல் ஜோடி தங்களிடம் இருந்த போலி ரூபாய் பணத்தை கொடுத்து அங்கிருந்த நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த ஜோடி நகைகளை வாங்கிச் சென்ற பிறகுதான் கடை முதலாளிக்கு இது போலி பணம் என்று தெரியவந்திருக்கிறது.
 
மொத்தம் 1 லட்சம் ரூபாய்ய்கு மேல் இந்த மோசடி நடத்தியுள்ளதாக கடையின் முதலாளி போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 
அந்த போலி ருபாய் நோட்டுக்களில் ஒரு பொதுத்துறை வங்கியின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்த கடை முதலாளி  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு போலீஸிடம் சென்றுள்ளார்.
 
இந்த புகாரை ஏற்று கொண்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த ஜோடியை வலைவீசித் தேடி வருகின்றனர்.