கரூர் அருகே மழைவேண்டியும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு வழிபாடு!

கரூர் அருகே மழைவேண்டியும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு வழிபாடு, கரூரை அடுத்த தொழிற்பேட்டை பத்ரகாளியம்மன் ஆலயத்தில்  நடைபெற்றது.
கரூர் அருகே சணப்பிரட்டி கிராமம், நரிக்கட்டியூர் (தொழிற்பேட்டை) ஆசிரியர் காலனியில் அமைந்து அருள் பாலித்து வரும், அறச்சாலை ஸ்ரீ  பத்ரகாளியம்மன் ஆலய 28-ஆம் ஆண்டு விழாவும், மழைவேண்டியும், உலக நன்மை வேண்டியும் கூட்டு வழிபாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக
நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு விஷேச ஹோமங்களும் யாகங்களும் நடைபெற்று வந்தநிலையில், அம்மன் பத்ரகாளியம்மனுக்கு விஷேச தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :