1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (20:28 IST)

குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்...

கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு பகுதிகளான மக்கள் பாதை , பழைய திண்டுக்கல் சாலை மற்றும் லைட்டவுஸ் கார்னர் பகுதிகளில் சுமார் 2 மாத காலத்திற்க்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கரூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். 
இதனை அலட்சிய போக்கோடு கண்டுகொள்ளாத நகராட்சி பொருப்பாளர் மற்று பொறியாளர் ராஜேந்திரன் புகார் அளித்தவர்களை அலைகழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் கரூர் – பழைய திண்டுக்கல் சாலையில் திடீர் கழிவு நீரருடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியளால் அப்பகுடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்து. 
 
இதனிடையே அந்த வழியாக வந்த அதிமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள். பொதுமக்களிடம் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கேட்டறிந்து உடனே நகராட்சி நிர்வாக அதிகாரிகளை வரவழைது கழிவுநீர் பிரச்சணைக்கு தீர்வு கண்டனர்.