அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பெரும்பாலானோர் கருதினர். குறிப்பாக கமல்ஹாசன் கட்சி மீது இளைஞர்களுக்கு அபார நம்பிக்கை எழுந்தது. இதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மாணவர்கள், இளைஞர்கள் அந்த கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர் ஆனால் கமல் கட்சி வேட்பாலர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வு அடைந்தனர்...