PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றதை அடுத்து இராஜகோபாலன் போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி காவல்துறையினருக்கு மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து இன்று முதல் ராஜகோபாலன் மூன்று நாட்கள் காவல்துறையினரின் கஸ்டடியில் இருப்பார் என்பதும் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க போலீசார் தயாராகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.