சதுரகிரியில் மஹாளய அமாவாசை வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!
இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் 18 சித்தர்கள் தவம் புரிந்ததாகவும், இன்றும் சித்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்துவதாகவும் ஐதிகமாக கருதப்படுகிறது.
சதுரகிரி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை, மற்றும் பிரதோஷம் போன்ற நாட்களில் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று, புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
இன்றைய தரிசனத்தின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டதாகவும் கோவில் பரம்பரை அறக்கவலர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran