வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (16:47 IST)

இன்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

Lord Perumal
இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதும், குறிப்பாக சனிக்கிழமைகளில் அதிக பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோயில் புரசைவாக்கம், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதேபோல், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்ததாகவும் கூறப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, இன்று ஏகாதேசி என்பதால் அதிகளவிலான பக்தர்கள் அனைத்து பெருமாள் கோவில்களிலும் தரிசனம் செய்து வருவதாகவும், அனைத்து பெருமாள் கோவில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran