திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (15:34 IST)

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வரவில்லையா? என்ன காரணம்?

கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 5-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்காக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரடியாக சென்று ஜனாதிபதியை சந்தித்து அழைப்பிதழை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களுக்கு வேறொரு பணி இருப்பதன் காரணமாக அவர் தமிழ்நாடு கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வரவில்லை என்றும் எனவே ஜூன் 5-ம் தேதிக்கு பதில் குடியரசு தலைவர் அளிக்கும் வேறொரு நாளில் இந்த விழா நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran