1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (12:47 IST)

வீழ்ந்த அதிமுக விக்கெட்: திமுகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 

 
ஆம், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் தோப்பு வெங்கடாசலம் இணையவுள்ளார்.
 
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.