வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:30 IST)

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அவதி..!

செங்கல்பட்டு நகரை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மேம்பால பணிகள் நடைபெறுவதாலும், அடிக்கடி இரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் அதே போல் பயணிகள் அதிக அளவில் சென்னையில் இருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். 
 
இந்த நிலையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் போக்குவரத்து சீராகும் என்றும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருப்பதால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்பட்ட வருகிறது.
 
Edited by Mahendran