செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (06:40 IST)

இன்று 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடந்து வரும் நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் சமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இன்று நடைபெறும் தேர்தலில் ஆந்திராவில் 25 தொகுதிகள், தெலுங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்திய பிரதேசம் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்தில் தலா நான்கு தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இதில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் மாலை ஆறு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் ஒடிசா மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தலும் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva