மெர்சல் என்றால் திடீர் அதிர்ச்சி! பழனிச்சாமியின் இந்த ஆட்சியால் மெர்சல் ஆகி விட்டார்கள் மக்கள். ஒன்பது கிரகமும் உச்சமும் பெற்ற ஒருவர் பெரும்பான்மையுடனும் ஆட்சி செய்யலாம், பெரும்பான்மை இல்லாமலும் ஆட்சி செய்யலாம், அவர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி!
நிகழ்கால தமிழகத்தின் தவிர்க்க முடியாத களப்பிளர் ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
தினமும் தொலைக்காட்சிகளின் தலைப்புச் செய்தி டெங்கு மரணங்கள் வருமே, அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
டெங்குவின் மரணங்களுடன் மௌனத்துடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்ற ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
இது என்ன பிரமாதம்! இன்னொன்று இருக்கு! என்று அமைச்சர்கள் மக்களை சிரிக்க வைக்கும் ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
காணா சொர்க்கம் எதற்கு? மக்களின் நலன் எதற்கு? டெல்லியின் கடைவிழிப்பார்வை போதும் என்று கங்கணம் கட்டி நிற்கும் ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
நினைவுகளை தின்று, உயிர் வாழும் ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
விடியல் எது? என்று மக்கள் கேட்டால், அது புனிதம் உங்கள் கண்களுக்கு புலப்படாது என்று சொல்லும் ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர்தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
நிரந்தரம் ஓன்று இல்லாத நினைவுகளை, நிலை அடையாத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
டெங்கு! டெங்கு! டெங்குவை தவிர வேறு எதையும் பேச வைக்காத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
எதையும், யாவையும், ஒரு சேர மக்களுக்கு தராத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
கருப்பு, வெள்ளை வாழ்க்கை! ஆனாலும் மக்களின் கண்களில் டெங்கு எனும் கருப்பு கனவுகள் உடைய ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர்தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
முடிவுக்கு வரும் ஒரு ஆட்சியின் நாட்கள் இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தவிர்த்து முதல்வரின் குரல் கேட்காத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அந்த ஆட்சியின் பெயர் தான் நம் மெர்சல் பழனிச்சாமி ஆட்சி !
மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! அது வரை தான் இந்த ஆட்சியின் நாட்கள்.
இரா காஜா பந்தா நவாஸ்