1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 அக்டோபர் 2017 (11:21 IST)

இணையத்தில் வெளியானது மெர்சல் படத்தின் 16 நிமிட வீடியோ!!

இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படம் இன்று வெளியாகியுள்ளது. பல தடைகளை தாண்டி குறித்த தேதியில் படம் வெளிவந்துள்ளது.


 
 
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் விரும்பு படமாக மெர்சல் இருப்பதாக முதல்கட்ட விமர்சனங்கள் வெளிவந்து உள்ளது.
 
இதுவரை எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் வராததால் படத்தின் வசூலை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், படத்தின் 16 நிமிட காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
அனைத்து தரப்பு ரசிகர்கலும் படத்தை பாராட்டி வரும் நிலையில், இணையத்தில் வெளியிடப்பட்ட படத்தின் காட்சிகளால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.