செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!!

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு.நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில். அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். 

பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலையை சுற்றி வருவது  சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும். அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த  தீர்த்தமாக போற்றப்படுகிறது. 
 
மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது. மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 
இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது  அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்  கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல் புராணம் தெரிவிக்கிறது. 
 
நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம் என்ற திட நம்பிக்கையில்தான் துயில் கொள்கிறோம். நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும் சாதிக்கிறோம். நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது.
 
எனவே பூரணமான நம்பிக்கையோடு தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.