திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendren
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (17:17 IST)

இலவச புடவை வாங்க சென்ற 4 பெண்கள் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு: திருப்பத்தூரில் சோகம்..!

dead
இலவச புடவை வாங்க சென்ற 4 பெண்கள் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு: திருப்பத்தூரில் சோகம்..!
தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் இலவச புடவை வழங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து அந்த புடவையை வாங்க சென்ற 4 பெண்கள் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பத்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவசமாக புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது. இந்த புடவை வாங்குவதற்கு முண்டி அடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் முயற்சித்தனர் 
 
1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் மயக்கம் அடைந்ததாகவும் இதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா இது குறித்து விசாரணை செய்து வருகிறார்.

Edited by Mahendren