1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirunavukarasar reply EVKS Elangovan remarks

இனிமேல் என்னை ஈவிகேஸ் இளங்கோவன் திட்டமாட்டார். திருநாவுக்கரசர்

thirunavukarasar
காங்கிரஸ் கட்சியும், உள்கட்சி பூசலும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் போல பிரியாதது என்பது கடந்த பல வருடங்களாக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அடிக்கடி அவரது சொந்தக்கட்சியினர்களாலேயே சீண்டப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.



 



இந்த வகையில் சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 'திருநாவுக்கரசர் என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது' என்று கிண்டலுடன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்துக்கு இன்று பதில் கூறிய திருநாவுக்கரசர், 'ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான். என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும்? என்று கூறினார்.  இதன் மூலம் திருநாவுக்கரசர்-ஈவிகேஸ் ஆகியோர்களுக்கிடையிலான உட்கட்சி பூசல் உச்சத்தை அடைந்திருப்பதால் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஏடிஎம்-ல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுப்பீர்களா? அப்ப இதை கண்டிப்பா படிங்க