ஏடிஎம்-ல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுப்பீர்களா? அப்ப இதை கண்டிப்பா படிங்க
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய டிஜிட்டல் இந்தியாவுக்கு முழுவடிவம் கொண்டு வரும் வகையில் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
எனவே கடந்த சில மாதங்களாக ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும்
பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்ற நிலை மாறி இனிமேல் ஏடிஎம்-ல் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் பிடிக்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன.
அதேபோல் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் வங்கிக்கணக்கில் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ அதற்கும் பரிவர்த்தனை கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் டெபாசிட் அல்லது எடுக்கப்படும் பணத்தின் அளவை பொறுத்து ரூ.150 முதல் ரூ.500 வரை பிடித்தம் செய்யப்படும் என்றும் இருப்பினும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் வங்கித்தரப்பில் கூறப்பட்டுள்ளது.