1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (09:10 IST)

திருநாவுக்கரசரின் அடுத்த திட்டம் என்ன ? – ராகுலோடு திடீர் சந்திப்பு…

தமிழகக் காங்கிரஸ் தலைவர் பறிகக்ப்பட்ட பின்பு காங்கிரஸ் தலைவர் ராகுலை டெல்லி சென்று சந்தித்துள்ளார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் அதிமுக வில் மிக இளம் வயதிலேயே சிறப்பாக செயல்பட்டவர். எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்களுள் முக்கியமானவர். பின்னர் சிலக் காரணங்களால் அதிமுக வில் இருந்து விலகி பாஜக வில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு பாஜக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸின் தமிழகக் கமிட்டியின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக திருநாவுக்கரசு பதவி வகித்து வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் அவரது பதவி இப்போது பறிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.எஸ். அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயல்தலைவர்களின் பதவிக்கும் புதிய ஆட்களாக எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த திடீர் முடிவு தமிழக அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் அவரது பறிக்கப்பட்ட பின்பு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலை அவசரமாக சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பிற்குப் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘ ராகுல்தான் என்னை பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைத்தார். தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியையும் அளித்தார். அவருக்கு நன்றித் தெரிவிப்பதற்காகவே சந்தித்தேன். ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன். இந்தத் தேர்தலில் ராகுல் பிரதமராகப் பாடுபாடுவேன். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகள். மேலும் கட்சியில் எனது எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ராகுலோடு ஆலோசித்தேன்.’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக ரஜினியுடனான அமெரிக்க சந்திப்புக் குறித்து ‘ரஜினி எனது நண்பர். ஆனால் அவரை அமெரிக்காவில் சந்திக்கவில்லை’ எனக் கூறினார்.