சிறையில் இருந்து வெளியில் வந்ததும் திருமுருகன் காந்தி முதலில் செய்த காரியம்
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தன் மீதான் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்று இன்று விடுதலையாகி உள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்திக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றதையடுத்து இன்று மாலை ஐந்து மணியளவில் அவர் வேலூர் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறைக்கு வெளியே காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பளித்தனர். அதை அடுத்து செய்தியாளர்களை சந்த்தித்து பேசிய அவர் ‘கைதுகளுக்கு அஞ்சப்போவதில்லை தொடர்ந்து செயல்படுவோம்’ எனக் கூறினார்
அதையடுத்து வேலூரில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.