புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:13 IST)

திருமுருகன் காந்தி விரைவில் விடுதலை?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்ப்ட்டு உள்ளதாக மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது  ஊபா பிருவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் போலீஸார் வழக்கு பதிந்தனர்.. எனினும்  எழும்பூர் நீதிமன்றம் அவரை ஊபா பிரிவிலிருந்து விடுவித்தது. பிற வழக்குகளுக்காக அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

வேலூர் போலீஸ் அவரை காற்றோட்டம் இல்லாத தனிமை சிறையில் வைத்தும், சுகாதாரமற்ற உணவு மற்றும் அவரது உடல் உபாதைகளுக்கு சிகிச்சை வழங்க மறுத்தும் வந்ததனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் வேலூரை அடுத்த அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறையிலேயே மயங்கி விழுந்தார். அதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சோதனையில் அவருக்கு குடல்புண் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோக, வயிற்றுவலி, வாயு பிரச்சனை, அல்சர், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளும் அவருக்கு இருக்கிறது.

சிறையில் அவருக்கு அளிக்கப்படும் உணவுகளும் அவரின் உடலுக்கு ஒத்துப்போகவில்லை. ஆனால், அவர் விவாகரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என மே 17 இயக்கத்தின் நிர்வாகிகள் புகார் கூறினர்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமுருகன் காந்தியின் விடுதலை குறித்த செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. மே 17 இயக்கத்தின் அய்திகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை மே 17 இயக்கத்தினர் பகிர்ந்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது ’மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டு, அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டுவிட்டது.இன்னும் தோழர் குறித்தான 3 பி.டி. வாரண்ட்கள் மட்டுமே நிலுவையில் இருக்கின்றன. அவற்றைக் காட்டி தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யாமல் இருக்க முடியாது.’

மேலும் ’இனிமேலும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சிறைத்துறையோ, காவல்துறையோ விடுதலை செய்யாமல் வைத்திருந்தால் அது சட்டவிரோத காவலாகும். எனவே திருமுருகன் காந்தி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.