செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (19:08 IST)

சுகாதரமான அறை; அருமையான அதிகாரிகள்! – போலீஸ் ஸ்டேசன் பத்தி ட்ரெண்டான ரிவ்யூ !

சென்னையில் உள்ள காவல் நிலையம் பற்றி இளைஞர் ஒருவர் இணையத்தில் கொடுத்துள்ள விமர்சனம் தற்போது வைரலாகியுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் முக்கியமான அப்ளிகேசன் கூகிள் மேப். பயணம் செய்யும் பலர் தனது வழிகாட்டியாக பயன்படுத்துவது இந்த அப்ளிகேசனைதான்! இந்த அப்ளிகேசனில் முக்கியமான இடங்கள், அதுகுறித்து அங்கு சென்றவர்களின் கருத்துக்கள் இடம்பெறும்.

அதில் திருமுல்லைவாயில் காவல் நிலையம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஒருவர் ”நான் ஆவணங்கள் இல்லாமல் இரவில் வண்டியோட்டி வந்ததற்காக என்னை லாக் அப்பில் வைத்திருந்தார்கள். கையூடு எதுவும் பெறாமல் எனது முகவரி மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பி விட்டார்கள். மிகவும் நல்ல அதிகாரிகள்” என கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து இணையத்தில் ட்ரெண்டாகி உள்ள நிலையில் மேலும் இந்த காவல் நிலையம் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.