1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:58 IST)

மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும்: திருமாவளவன் எச்சரிக்கை

Thirumavalavan
இந்தியை திணிக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு மிகப்பெரிய மொழி போர் வெடிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு மிகப்பெரிய மொழிப் அவரை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
 
இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் இந்தி திணிப்பே இல்லாத நிலையில் இந்திக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர் என பாஜகவினர் இந்த போராட்டம் குறித்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran