தொடர்புடைய செய்திகள்
- தனித்து களமிறங்கும் விடுதலை சிறுத்தை!.. திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை!..
- யோசிச்சி சொல்றோம்னு சொல்லியிருக்காங்க!.. திமுகவில் உதயநிதிக்கு சீட் கிடைக்குமா?...
- இவ்ளோதான் சீட்!. இருந்தா இரு.. இல்லனா போ!.. திமுக அட்ராசிட்டி!.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!..
- அப்ப போயஸ்கார்டன் போனாங்க!.. இப்ப டெல்லிக்கு போறாங்க.. அசிங்கம்.. திருமா கோபம்!...
- டெல்லி போதும்!.. தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கு வர துடிக்கும் கனிமொழி!.. நினைப்பது நடக்குமா?!..
பானை சின்னத்தில்தான் போட்டி.. திமுகவுக்கு செக் வைத்த திருமாவளவன்!...
தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைக் கட்சி கடந்த பல தேர்தலாகவே திமுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்திருப்பதால் பல வருடங்களாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை. எனவே, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுக்கு கேட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவெடுத்திருக்கிறது.
காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தேதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது..
விடுதலைச் சிறுத்தை கட்சியை பொறுத்தவரை இரண்டு இலக்க தொகுதிகளை கேட்டது. ஆனால் அவ்வளவு கொடுக்க முடியாது என திமுக மறுக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இறுதியாக விடுதலை சிறுத்தைக்கு 8 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது. அதில் 6 தனித்தொகுதிகள் மற்றும் 2 தனித்தொகுதிகள் அடக்கம்.
இந்நிலையில், 8 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைக் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்திருக்கிறார். மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக கூட்டணியில் சலசலைப்பை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம் எனவும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சில தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது திருமா அதை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.