வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (21:53 IST)

நான் தோல்வி அடைந்திருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பேன்: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் பெற்று சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட முழு வெற்றியை பெற்றபோதிலும் காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணி ஆட்சி அமைக்காததால் திமுக கூட்டணி கட்சிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக திமுக கூட்டணியின் இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புதுவையை சேர்த்து மொத்தம் 40 எம்பிக்கள் இருந்தாலும் முதல்முறையாக தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட அமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தபோது, 'மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்ற செய்தி கிடைத்ததும், சிதம்பரம் தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்காக மகிழ்ச்சி அடையவில்லை. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்து, நான் சிதம்பரம் தொகுதியில் தோற்றிருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
 
மேலும் மத்தியில் யார் ஆட்சிக்கு வர கூடாது என எதிர் கட்சிகளாகிய நாங்கள் கணக்கு போட்டு காய் நகர்த்தினோமோ, அந்த மதவாத சக்தியே மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது என்னை வேதனையடைய செய்துள்ளது என்றும் திருமாவளவன் கூறினார்.