1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:13 IST)

எம்பி தொகுதி நிதியில் கைவைப்பதா? திருமாவளவன் ஆவேசம்

நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியபோது இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஆகியோர்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தொகுதி எம்பி தொகுப்பு நிதியாக ரூ.10 கோடி வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்த நிதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவும் ஒருசிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்பிமான திருமாவளவன் அவர்கள் கூறியபோது ’எம்பிக்கள் தொகுதி தொகுப்பு நிலையில் கைவைப்பது முறையானது அல்ல என்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு இது எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அவசர சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள திருமாவளவன், தொகுதி மேம்பாட்டு நிதி என்பது ஒரு தொகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக செலவு செய்வது ஆகும் என்றும், இதனை நிறுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமின்றி, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார் 
 
இதேபோல் மதுரை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேஷ் கூறும்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரே ஒரு சதவீத வரியை அதிகரித்தால் ரூபாய் 5000 கோடி கிடைக்கும் என்றும் அதை விட்டுவிட்டு எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதும், எம்பிக்கள் சம்பளத்தை கை வைப்பதும் சரியான நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.