புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 29 ஜனவரி 2022 (11:56 IST)

திமுக நினைச்சா மேயர் பதவி கூட தரலாம்! – திருமா கூட்டணி பேச்சுவார்த்தை!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு குறித்து திருமாவளவன் திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நேற்று திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்த நிலையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மற்றும் இடபங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகாமாக போய்க் கொண்டிருக்கிறது. விசிகவுக்கு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தலைவர். துணை தலைவர் பதவிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளோம். குறிப்பாக மேயர் பதவி என கேட்கவில்லை. பொதுவாகதான் கேட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.