வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2025 (11:40 IST)

யார் அந்த சார்? நேர்மையான விசாரணை வேண்டும்: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து திருமாவளவன்..!

Thiruma
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் அமைதியாக இருந்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வல்லுறவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும், கைதாகி இருப்பவரை கடந்து மேலும் சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். எனவே, அரசு நேர்மையான முறையில் விசாரணை செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கூறினார்.
 
மேலும், "யார் அந்த சார்?" என்ற கேள்விக்கு, நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
இந்த விவகாரத்திற்கு போராட்டம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுந்தபோது, பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். இந்த பிரச்சனையை அரசியல் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே போராட்ட அனுமதி மறுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
 
 
Edited by Mahendran