1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:07 IST)

'சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு `மைக்’ மேனியா’ நோய்: சி.விஜயபாஸ்கர் விமர்சனம்..!

vijayabaskar
சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மைக் மேனியா நோய் என்றும், மைக்கை பார்த்தால் ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
 
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய போது, இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். இங்கு பாதுகாப்பு அதிகம் என்பதால் தான் அதிக மாணவிகள் நம்பிக்கையுடன் படிக்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு தற்போது கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் திமுகவும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்."
 
திமுகவை சேர்ந்தவர் குற்றவாளி என்பதால் தான் 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பதை குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.
 
சட்டத்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், காவல் ஆணையர் ஆகிய மூன்று பேரின் பேட்டிகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. சட்டத்துறை அமைச்சருக்கு மைக் மேனியா நோய் வந்துவிட்டது. மைக்கை பார்த்தால் ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டே வருகிறார். கருத்துக்கள் சட்டபூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் எதுவும் சட்டபூர்வமாக இல்லை என்று கூறினார்.
 
 
 
Edited by Mahendran