1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (14:07 IST)

ஆளுநர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன் ஆவேசம்

ஆளுநர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
 தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உரையை கவர்னர் ரவி வாசிக்க மறைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் கவர்னராக இருந்த யாரும் தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கவர்னரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிலையில் உரையை ஏன் வாசிக்கவில்லை என்று இரண்டு நிமிடம் மட்டும் விளக்கம் அளித்துவிட்டு கவர்னர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிவிட்டார். 
 
இந்த நிலையில் கவர்னரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்  கவர்னரை தமிழ்நாட்டில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
"திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்’
 
Edited by Mahendran