1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2024 (15:32 IST)

திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை: முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி..!

Thiruma
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக விடமிருந்து எந்த அழுத்தமும் நெருக்கடியும் இல்லை என்று கூறினார்.

புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாயை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வழங்கினார்.

அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "புயல் பாதிப்பு நிவாரண நிதியாக எங்கள் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாயை வழங்கினோம்" என்று தெரிவித்தார். அதன் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அது குறித்து அவரிடம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டதுடன், கட்சியின் நன்மதிப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு எதிராக நடந்ததால் மூத்த நிர்வாகிகளை ஆலோசனையுடன் ஆறு மாத காலத்திற்கு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்" என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படவில்லை என்றும் அது குறித்து முதல்வருடன் பேசவும் இல்லை என்றும் திருமாவளவன் கூறினார். மேலும், "விஜய் கலந்து கொண்ட விழாவில் நான் பங்கேற்காதது எனது சுதந்திரமான முடிவு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த மோதலும் இல்லை.  


Edited by Mahendran