செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (12:03 IST)

இந்துக்களே உஷார்: மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்; ஹெச்.ராஜா கடும் தாக்கு

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலினை மக்கள் நம்ப வேண்டாம் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா  குற்றம்சாட்டியுள்ளார்.
 
மதமாற்றத்தை கண்டித்த காரணத்தால் கும்பகோணத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் 'கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!

இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்' என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம்.

இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.