ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (17:31 IST)

பொருளாதார மந்தத்தில் நாடு ..பாஜக.வுக்கு கொண்டாட்டமா ? - பிரியங்கா காந்தி கேள்வி

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. எனவே பாஜக இரண்டாம் முறையாகப் பதவியேற்று ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆனதையொட்டி, பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நம் நாடு என்றுமே இல்லாத வகையில், கடும் பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன்சிங் சமீபத்தில் தற்போதைய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, கோட்டு போட்டு மழையில் நனைபவர் என பாஜக,  அவரை விமர்சித்ததாகத் தகவல் வெளியானது.
 
இதையடுத்து,பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவும், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங்கின் அறிவுறையை கேட்டுக்கொள்ளுவது நல்லது என அறிவுறுத்தினார். 
 
இதற்கிடையே பொருளாதார மந்தத்தையும், மோட்டார் வானத்துறையில் ஏற்பட்டுள்ள நுகர்வுகுறைவு மற்றும் வேலைவாய்ப்பை சரிசெய்யவும், நாட்டில் முக்கியமாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் லேசாக பங்குச் சந்தைகளும் , பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் மீண்டுவருகின்றன. 
 
எனவே, நாடு பொருளாதார மந்தத்தில் உள்ளபோது,பாஜக இரண்டாம் முறைப் பதவியேற்றதன் 100 வது நாளைக் கொண்டாடுவதாக காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறிதாவது :நாட்டின் பொருளாராத வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததற்கு  ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள குழப்பங்களே காரணம். முதலில், இவற்றை, பாஜகவின் மத்திய அரசு, சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ,கேட்டுக்கொண்டுள்ளார்.