1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (19:04 IST)

தோல்விக்குப் பின் மீண்டும் களத்தில் இறங்கிய ராமதாஸ் !

சமீபத்தில் நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக பலத்த தோல்வியைத் தழுவியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பாமகவின் நிறுவனம் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸாகத்தான் இருக்கும்.
கடந்தமுறை தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டா அன்புமணி ராமதாஸ், இம்முறையும் அதே தொகுதியில்  போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக இவர் பிரசாரத்தின் போது ஓட்டு எண்ணிக்கையின் போது நம்ம ஆளுகதான் இருப்பாங்க ...பார்த்துக்கலாம் ...என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தற்போது ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அதில், சிறுவர்கள் புகை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். அவர்களை அப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் நிறுவனங்களை தண்டிக்க வேண்டு என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் சட்டவிரோதமாக வெளியாகு விளம்பரங்கள் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர் இவ்விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.