வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 நவம்பர் 2024 (07:37 IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ரயில் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1:50க்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2:50க்கு புறப்பட்டு, இரவு 10:40க்கு திருநெல்வேலி அடைகிறது.

இந்த ரயிலில் ஏழு ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில், இந்த ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், எட்டு பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று ரயில்வே வணிகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை விரைவில் ஏற்கப்பட்டு 16 பெட்டிகளாக மாறும் என்று கூறப்படுவதால், பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


Edited by Siva